Oral-cancer.png

வாய்ப்புற்று நோய்

வாய்வழிக் குழியில் புற்றுத் திசுக்கள் வளருவது வாய்ப்புற்று ஆகும். பொதுவாக இது நாக்கையே பாதிக்கிறது. உள்வாயின் அடிப்பகுதியிலும், கன்னத்தின் உட்பகுதியிலும், ஈறுகளிலும், உதட்டிலும், அண்ணத்திலும் இது உருவாகலாம். பெரும்பாலான வாய்ப்புற்றுக்கள் நுண்ணோக்கியில் ஒரே மாதிரியாகவே தென்படும். அவை செதிள் உயிரணு புற்றுநோய் என அழைக்கப்படுகின்றன. இதுவே பொதுவான வாய்ப்புற்று வகை. செதிள் உயிரணுக்கள் வாய்க்குள்ளும், தோலினடியிலும் உட்பட உடலின் பல பாகங்களில் காணப்படுகின்றன.

வாய்ப்புற்றில் அரிய வகைகளாவன:

 • வாய்க்கரும் புற்று - தோலுக்கு நிறம் தரும் மெலனோசைட்டில் உருவாகும் புற்று
 • சுரப்பிப்புற்று - உமிழ்நீர் சுரப்பிக்குள் உருவாகும் புற்று

குறிப்புகள்: http://www.nlm.nih.gov/medlineplus/oralcancer.html
                        http://www.cdc.gov/OralHealth/oral_cancer/index.htm
                        http://oralcancerfoundation.org/
                        http://ocf.org.in/

அறிகுறிகளில் அடங்குவன:

 • வாயின் உள்ளும் நாக்கிலும் சிவப்பு அல்லது சிவப்புவெள்ளைத் திட்டுகள்
 • மூன்று வாரங்களுக்கு மேல் ஆறாத ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வாய்ப்புண்கள்
 • மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வாய் வீக்கம்
 • விழுங்கும்போது வலி
 • கழுத்தில் நீடித்த வலி
 • கரகரப்பான குரல்
 • காரணம் புரியாத உடல் எடை குறைவு
 • சுவை உணர்வில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள்
 • காதில் வலி
 • கழுத்தில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளில் வீக்கம்

குறிப்புகள்:
www.nhs.uk

டி.என்.ஏ. வில் ஏற்படும் பிறழ்வால் புற்றணுக்கள் செயலூக்கம் பெறுகின்றன. பல வகையான ஆபத்தை விளைவிக்கும் காரணிகள்:

புகைத்தலும் குடித்தலும்
புகைபிடித்தலும் (அல்லது சுருட்டு, புகைக்குழாய் போன்ற வேறு புகையிலைப் பொருட்கள்) மது அருந்துதலுமே வாய்ப்புற்றுக்கான இரு பெரும் காரணங்கள். இவை இரண்டுமே புற்றுநோயைத் தூண்டுவன. அதாவது அவற்றில் உள்ள வேதியற் பொருட்கள் டி.என்.ஏ. உயிரணுக்களைப் பாதித்துப் புற்று நோய்க்கு வழிவகுக்கும். ஒருவர் அதிகமாக புகைப்பவராகவும் குடிப்பவராகவும் இருந்தால் வாய்ப்புற்றுக்கான ஆபத்தும் அதிகமாகும்.

பாக்கு
பாக்கு இலேசாக போதைத் தன்மை கொண்டதாகும். இந்தியா, சிரிலங்கா போன்ற தென்கிழக்கு ஆசிய மக்கள் பரவலாகப் பாக்கைப் பயன்படுத்துகின்றனர்.
காப்பியைப் போலவே பாக்கிற்கும் நரம்பைத் தூண்டும் ஆற்றலுண்டு. புற்று நோயைத் தூண்டும் ஆற்றல் பாக்கிற்கு உண்டு. என்வே அது வாய்ப்புற்றை உருவாக்கும் ஆபத்துடையது ஆகும். புகையிலையோடு சேர்த்து சவைக்கும்போது இந்த ஆபத்து அதிகரிக்கிறது.
இந்திய, சிரிலங்க மக்கள் பரம்பரை பரம்பரையாகப் பாக்கைப் பயன்படுத்துவதால் பிறரைவிட இவர்களுக்கு வாய்ப்புற்று வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன.

புகையற்ற புகையிலை
அவையாவன:

 • சவைக்கும் புகையிலை
 • மூக்குப்பொடி
 • ஸ்நஸ்- சுவீடனில் செல்வாக்கு பெற்ற புகையற்ற புகையிலை. மேல் உதட்டில் வைக்கும்போது இது மெதுவாக இரத்தத்தில் உறிஞ்சப்படும்.

கஞ்சா
கஞ்சா புகைப்பதும் வாய்ப்புற்று வருவதற்கான சாத்தியக் கூற்றை அதிகரிக்கிறது. பொதுவாகப் புகைப்பவர்களை விட கஞ்சா புகைப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். ஏனெனில் புற்று நோய் தூண்டியான தார் கஞ்சா புகையில் உள்ளது.

மனித பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus (HPV)
கர்ப்பவாய், ஆசனவாய், வாய், தொண்டை போன்ற ஈரப்பசையுள்ள சவ்வுகளைப் பாதிக்கும் ஒரு வகையான வைரசுகளே மனித பாப்பிலோமா வைரசுகள். இவற்றின் பாதிப்பால் சில திசுக்கள் அசாதாரணமாக வளர்ந்து புற்றாக மாறலாம்.

மோசமான வாய் சுகாதாரம்
பற்சிதைவு, ஈறுநோய்கள், முறையாக பல்விளக்காமை, சரியாகப் பொருத்தாதப் பொய்ப்பல் ஆகியவை வாய்ப்புற்றுக்கான ஆபத்தை அதிகரிப்பதற்கான சான்றுகள் உள்ளன.

குறிப்புகள்:
http://www.nhs.uk/Conditions/Cancer-of-the-mouth/Pages/Causes-v2.aspx

திசுச்சோதனை
புற்று உயிரணுக்களைக் கண்டறிய பாதிக்கப்பட்ட திசுக்களின் ஒரு சிறு பகுதி அகற்றப்பட வேண்டும். இம்முறை திசுச்சோதனை என அழைக்கப்படுகிறது.

துளைத்திசுச்சோதனை
பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகப்படும் பகுதி நாக்கு, வாயின் உட்பகுதி போன்று எட்டக் கூடிய வகையில் இருந்தால் துளைத்திசுச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பகுதி மரப்பு மருந்து கொடுத்து இடுக்கியால் ஒரு சிறு பகுதி அகற்றப்படுகிறது.  இம்முறை வலிக்காது எனினும் சற்று அசௌகரியம் அளிக்கும்.

நுண்ணூசியுறிஞ்சல்
கழுத்து வீக்கம் புற்றாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தால் செய்யப்படும் ஒரு வகையான திசுச்சோதனை.

முழு அகநோக்கல்
தொண்டையின் பின்புறம் அல்லது மூக்கு உட்துவாரங்களில் சந்தேகத்திற்குரிய திசு இருந்தால் முழு அகநோக்கல் முறையில் திசுச்சோதனை ஆய்வு செய்யப்படும்.

அச்சோதனைகளில் அடங்குவன:

 • ஒரு எக்ஸ்-கதிர்
 • ஒரு காந்த ஒத்திசைவு பிம்ப ஊடுகதிர்ப்படம் (magnetic resonance imaging (MRI) scan)
 • ஒரு கணினி வரைவி ஊடுகதிர்ப்படம் (computerised tomography (CT) scan)
 • ஒரு நேராக்கமின்மம் உமிழ்வுவரைவி ஊடுகதிர்ப்படம் (positron emission tomography (PET) scan)

PET ஊடுகதிர்ப் படம் எடுக்க உடலுக்குள் ஒரு கதிர் இயக்க வேதியல் வேவுப்பொருள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனை ஒரு தனிவகை ஒளிப்படக்கருவியில் பார்க்க முடியும்.


குறிப்புகள்:
http://www.nhs.uk/Conditions/Cancer-of-the-mouth/Pages/Diagnosis.aspx

அறுவை மருத்துவம்
பாதிக்கப்பட்ட திசுக்களை வாயின் பிற பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் அகற்றுவதே வாய்ப்புற்றுக்கான அறுவை மருத்துவத்தின் நோக்கம்.

ஒளியாற்றல் சிகிச்சை
புற்று ஆரம்ப கட்டத்தில் இருந்தால் ஒளியாற்றல் சிகிச்சை எனப்படும் லேசர் அறுவை மருத்துவத்தால் கட்டிகளை அகற்ற முடியும். முதலில் ஒரு மருந்தின் மூலம் திசுக்கள் ஒளியின் விளைவுகளை உணரும் திறன் கொண்டவைகளாக மாற்றப்படும். பின் லேசர் மூலமாக கட்டி அகற்றப்படுகிறது.

கதிரியக்க சிகிச்சை
புற்று அணுக்களை அழிக்க கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. புற்றை கதிரியக்கத்தால் மட்டுமே அகற்றிவிட முடியும். ஆனால் புற்று திரும்ப வளராமல் தடுக்க அது அறுவை சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படுகிறது.

வேதியற்சிகிச்சை
புற்று பரவி இருந்தாலும் புற்று மீண்டும் வளரும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக எண்ணப்பட்டலும்  வேதியற்சிகிச்சை கதிரியக்க சிகிச்சையுடன் இணைத்துச் செய்யப்படுகிறது.

குறிப்புகள்:
http://www.nhs.uk/Conditions/Cancer-of-the-mouth/Pages/Treatment.aspx

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.