கைகால்வாய் நோய்

கைகால்வாய் நோய் ஒரு பரவும் நோய் ஆகும். பெரும்பாலும் சிசுக்களையும் குழந்தைகளையும் இது பாதிக்கும். இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் கூட வருவதுண்டு. கடும் வைரல் தொற்றான இது ஒரு தொகுதி குடல் வைரசுகளால் ஏற்படுகிறது. காக்சாக்கிவரஸ் A16 (CA16) மற்றும் எண்டரோவைரஸ் 71 (EV71) ஆகியவை இதில் அடங்கும். காய்ச்சல், கை கால் புட்டம் மற்றும் வாயில் வலிதரும் புண்கள் ஆகிய இலேசான இயல்புகள் கொண்ட நோய் இது. EV71 வைரசால் ஏற்படும் தொற்று குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும்; சில சமயம் மரணத்தில் முடியும்.

இந்நோயின் திடீரெழுச்சி உலகம் முழுவதும் காணப்படுகிறது. ஆனால் அண்மையில் சீனா, ஜப்பான், ஹாங்காங், கொரியக் குடியரசு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், வியட்நாம் உட்பட பல ஆசிய நாடுகளில் அதிகம் ஏற்பட்டது.

இந்தியாவில் இந்நோய் 2003-ல் முதன்முதலாகக் கொச்சியில் கண்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நாக்பூர், ஜோர்ஹாத், கொல்கத்தா, புபனேஸ்வர், உதைப்பூர், லே ஆகிய இடங்களில் திடீர் எழுச்சிகள் ஏற்பட்டன.இந்நோய், வேறு ஒரு வைரசால் கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்நோய் அல்ல. அது மனிதர்களுக்குப் பரவுவதில்லை.

குறிப்புகள்:

www.wpro.who.int/topics/hand_foot_mouth/en/

www.wpro.who.int/mediacentre/factsheets/fs_

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4318054/

www.idsp.nic.in/WriteReadData/l892s/72914162

www.ncdc.gov.in/writereaddata/linkimages/July

கைகால்வாய் நோய், பொதுவாக இலேசான நோயே. பாதிப்பு ஏற்பட்டு 3-7 நாட்களில் அறிகுறிகள் தோன்றும்.

 • முதல் அறிகுறியான காய்ச்சல் 24-48 மணி நேரம் நீடிக்கும். பசியின்மை, உடல்சோர்வு, தொண்டைவலி காணப்படும்.
 • காய்ச்சலுக்குப் பின் ஓரிரு நாட்களில் நாக்கு, ஈறுகள், கன்னத்தின் உட்புறத்தில் வலி தரும் புண்கள் உண்டாகும். ஆரம்பத்தில் இவை சிவப்பு புள்ளிகளாகத் தோன்றி, கொப்புளமாகிப் புண் ஆகும்.
 • ஓரிரு நாட்களில் உள்ளங்கை மற்றும் பாதங்களில் அரிப்பற்ற படைகள் உருவாகும். இவை பிட்டம் மற்றும் இன உறுப்புகளிலும் உண்டாகலாம். பெரும்பாலும் அனைத்து நோயாளிகளும் சிக்கல் எதுவும் இன்றி 7-10 நாட்களில் குணம் அடைவர்.
 • சில நோயாளிகளுக்கு அறிகுறிகளே காணப்படுவதில்லை. படை அல்லது வாய்ப்புண் உண்டாகலாம்.
 • EV71 – ஆல் ஏற்படும் கைகால்வாய் நோய், மூளைக்காய்ச்சல் மற்றும் மூளையழற்சியோடு தொடர்புடையது.  நரம்பியல் (தலைவலி, கழுத்து விறைப்பு, முதுகுவலி) மற்றும் சுவாச அறிகுறிகளைக் காட்டும். EV71 –ஆல் ஏற்படும் தொற்றால் சிக்கல்கள் கடுமையாக இருக்கும்; மரணம் கூட நேரிடலாம்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கைகால்வாய் நோய்

கர்ப்பிணிகள் கைகால்வாய் நோயால் பாதிக்கப்பட்டால் எதிர்விளைவுகள் (கருக்கலைவு, இறந்துபிறத்தல், பிறவிக் குறைபாடுகள்) எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால்  பேற்றுக்கு சற்று முன்னர் பதிக்கப்பட்டாலோ அல்லது பேற்றுக்கு முன் அறிகுறிகள் காணப்பட்டாலோ தாயிடம் இருந்து சேய்க்கு வைரஸ் கடந்து போகலாம்.

குடல் வைரசால் பாதிக்கப்படும் பெரும்பாலான சிசுக்களுக்கு இலேசான நோய்த்தாக்கம் இருக்கும். ஆனால் பிறந்து இரு வாரங்களுக்குள் இந் நோயால் பாதிக்கப்படும் சிசுக்களுக்கு நோய்த்தாக்கம் அதிகமாகக் காணப்படும்.

குறிப்புகள்:

www.ncdc.gov.in/writereaddata/linkimages/July

www.wpro.who.int/mediacentre/factsheets/fs_

குடல் வைரசுகள் எனப்படும் ஒரு தொகுதி வைரசுகளால் கைகால்வாய்நோய் ஏற்படுகிறது. இத் தொகுதியில் பல வகை வைரசுகள் உள்ளன. பொதுவாக காக்சாக்கிவரஸ் A16 (CA16) மற்றும் எண்டரோவைரஸ் 71 (EV71) ஆகியவற்றால் இது உண்டாகும். முன்னதில் நோய் இலேசாகவும் பின்னதில் கடுமையாகவும், உயிர் ஆபத்துடனும் காணப்படும்.

தொற்றுப் பரவல்

 • பரவக் கூடியது
 • மூக்கு, தொண்டைத் திரவம், எச்சில், கொப்புள நீர் அல்லது பாதிக்கப்பட்டவரின் மலம் ஆகியவைத் தொற்று பரப்பும் பொருட்கள்.
 • இவற்றோடு ஏற்படும் நேரடித் தொடர்பு மூலம் தொற்று ஒருவருக்கு ஒருவர் பரவுகிறது.
 • நோய் ஏற்பட்ட முதல் வாரத்தில் தொற்றுள்ள நோயாளி மிக அதிக அளவில் தொற்றைப் பரப்புவார். மலத்தில் வைரஸ் இருக்கும் வரை பல வாரங்கள் தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பரவும்.
 • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
 • பெரியவர்களுக்குப் பொதுவாக நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறு உண்டு. ஒரு குறிப்பிட்ட வைரசால் ஏற்பட்ட நோய்க்கு எதிர்ப்புசக்தி ஏற்படுகிறது. ஆனால் வேறு ஒரு குடல் வைரசால் மறுபடியும் தொற்று உண்டாகலாம்.

செல்லப்பிராணிகளுக்கோ அல்லது அவற்றின் மூலமோ நோய் பரவுவதில்லை.

குறிப்புகள்:

www.wpro.who.int/mediacentre/factsheets/fs

www.ncdc.gov.in/writereaddata/linkimages/July

கைகால்வாய்நோய் மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறியப் படுகிறது. தொண்டை, கொப்புளம், குத மாதிரி ஒற்றுக்கள், மலம், மூளைத் தண்டுவட பாய்மம் ஆகியவற்றில் வைரசுகளைக் கண்டறிய ஆய்வகச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 • மாதிரிகளில் வைரசைக் கண்டறிய பாலிமரேஸ் தொடர்வினை மூலம்  தலைகீழ் படியெடுப்பு செய்யப்படுகிறது.
 • இரட்டை இரத்த மாதிரிகளில் எதிர்பொருள் செறிவு நான்கு மடங்கு அதிகரித்தால் நோய் உறுதி செய்யப்படும்.

குறிப்புகள்

www.wpro.who.int/publications/docs/GuidancefortheclinicalmanagementofHFMD

www.ncdc.gov.in/writereaddata/linkimages/July08475966895.pdf

பெரும்பாலும் இது சுயமாய் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் ஒரு நோய். அறிகுறிகளை கொண்டு அளிக்கப்படும் பின்வரும் சிகிச்சையின் மூலம் பெரும்பாலான குழந்தைகள் தானாகவே குணம் அடைவர்:

 • நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்டப் போதுமான நீராகரம் உட்கொள்ளுவதை உறுதிசெய்ய வேண்டும். குளிர் நீராகாரம் பொதுவாக நல்லது.
 • காரமான அல்லது அமிலத்தன்மையுள்ள பொருட்கள் அசௌகரியம் அளிக்கும்.
 • எதிர்காய்ச்சல் மருந்துகளால் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
 • வாய் கொப்புளிக்கும் மருந்துகள் அல்லது தெளிப்பு மருந்துகளால் வாயை மரக்கச் செய்து வலியைக் குறைக்கலாம்.
 • கடுமையான அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

குறிப்பு:

www.ncdc.gov.in/writereaddata/linkimages/July08475966895.pdf

எந்தவித சிகிச்சையும் இன்றி பெரும்பாலும் அனைத்து நோயாளிகளுமே சிக்கல்கள் இல்லாமல் 7-10 நாட்களில் நலம் அடைவர்.

 • வாய்ப்புண்கள் காரணமாக சரிவர நீரருந்த முடியாவிட்டால் காக்சாக்கி வைரசுகளால் ஏற்படும் கைகால்வாய் நோயால் நீர்ச்சத்திழப்பு ஏற்படலாம்.
 • அபூர்வமாக கிருமியற்ற அல்லது விரல் மூளைகாய்ச்சல் ஏற்படலாம். காய்ச்சல், தலைவலி, கழுத்து விறைப்பு அல்லது முதுகு வலி இதன் அறிகுறிகள். சில நாட்களுக்கு உள்ளுறைவு சிகிச்சை தேவைப்படலாம்.

குறிப்பு

www.wpro.who.int/mediacentre/factsheets/fs_

கைகால்வாய் நோய் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து எதுவும் இல்லை. இது ஒரு தொற்று நோய் என்பதால் மேலும் பரவாமல்  தடுக்க நல்ல சுகாதாரப் பழக்கங்களைப் பேண வேண்டும்:

 • அடிக்கடி சோப்பும் நீரும் கொண்டு கையலம்ப வேண்டும்: குறிப்பாக, உணவு சமைப்பதற்கும் உண்ணுவதற்கும்  முன், குழந்தைகளுக்கு உணவூட்டும் முன், கழிவறை பயன்பாட்டிற்குப் பின், குழந்தை உள்ளாடை மாற்றியபின், கொப்புளம் அல்லது புண்ணைத் தொட்ட பின்.
 • கைகால்வாய்நோய் உள்ள குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பை (முத்தமிடல், கட்டிப்பிடித்தல், பாத்திரம் பகிர்தல்) தவிர்த்தல்.
 • நோயுற்ற நிலையில் இருமும்/தும்மும் போது வாய்/மூக்கு மூடுதல்.
 • குழந்தையின் கழிவால் அசுத்தமான  பொம்மை மற்றும் பிற சாதனங்களை முதலில் சோப் மற்றும் நீராலும் பின் குளோரின் கரைசலாலும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும் (1 மேசைக் கரண்டி குளோரின் உப்பும் 4 கோப்பை நீரும்; அதிக அளவில் தயாரிக்க: ¼ கோப்பை குளோரின் உப்பை 16 கோப்பை நீருடன் கலக்கவும்)
 • நலமடையும் வரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது.
 • மூடியுள்ள குப்பைக் கூடையில் பயன்படுத்திய டிஷ்யூ மற்றும் நாப்கினை இடவும்.
 • குழந்தைகள் காப்பு மையம், முன் நிலைப் பள்ளி, பள்ளிகளில் நோய் பரவலைத் தடுக்கத் தகுந்தத் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள்.
 • நோயுற்ற குழந்தையின் நிலையைக் கவனமாக கவனித்துத் தகுந்த சிகிச்சைகளைப் பின்வரும் சூழ்நிலைகளில் அளித்தல்:

o   அதிக அளவில் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தல்

o   கவனக் குறைவு அல்லது

o   பொதுவான நிலைமையில் பின்னடைவு

குறிப்புகள்:

www.wpro.who.int/publications/docs/GuidancefortheclinicalmanagementofHFMD

www.ncdc.gov.in/writereaddata/linkimages/July08475966895.pdf


 

 • PUBLISHED DATE : Sep 07, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 07, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.