குடல்வால் வீக்கமே குடல்வால் அழற்சி (அப்பெண்டிசிடிஸ்) எனப்படுகிறது. பெருங்குடலோடு ஒட்டி இருக்கும் குழல் போன்ற உறுப்பே குடல்வால் ஆகும். குடல்வாலுக்குள் ஏற்படும் அடைப்பின் காரணமாகவே இந்நிலை உருவாகிறது. அடைப்பால் அழுத்தம் அதிகரித்து அழற்சி உண்டாகிறது. குடல்வால் அழற்சி எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தில் பரவலாக உண்டாகிறது.
குறிப்புகள் : http://www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Appendicitis
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000256.htm
http://www.nlm.nih.gov/medlineplus/appendicitis.html
http://www.nhs.uk/Conditions/Appendicitis/Pages/Introduction.aspx
வயிற்றில் உண்டாகும் வலியே முக்கிய நோயறிகுறி. முதலில் வலி மெதுவாக ஆரம்பித்துப் பின் அதிகமாகும்.
பிற அறிகுறிகளில் அடங்குவன:
குறிப்புகள்: http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000256.htm
அடைப்போடு தொடர்புடையது என்பது தெளிவு. இந்த அடைப்பிற்குக் காரணம் சிறு மலத்துண்டுகள், வெளிப்பொருட்கள் அல்லது வேறு எவையாகவும் இருக்கலாம்.
குறிப்புகள்: http://www.nhs.uk/Conditions/Appendicitis/Pages/Introduction.aspx
நேரடி உடல் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கவனத்துடன் ஆராய்ந்துபார்த்தே நோய் கண்டறியப்படுகிறது. சரிவர கண்டறிய முடியவில்லை என்றால் ஆய்வகச் சோதனையும் கேளாவொலி அல்லது ஊடுகதிர் ஆய்வுகளும் செய்யப்படுகின்றன.
குறிப்புகள்: http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000256.htm
பொதுவாக அறுவை மருத்துவம் மூலம் குடல்வால் அகற்றப்படுகிறது. இம்முறை குடல்வால் அகற்றல் என்று அழைக்கப்படுகிறது. குடல்வால் துளையறுவை மூலம் அகற்றப்படுகிறது. வயிற்றில் நுண்ணிய கீறல்கள் உண்டாக்கி அதன் வழியாக மெல்லிய லாப்ராஸ்கோப் கருவியைச் செலுத்தி மருத்துவர் அறுவை மருத்துவம் செய்கிறார். இதனால் வயிற்றைக் கீறுவது தவிர்க்கப்படுகிறது.
குறிப்புகள்: http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000256.htm