Diarrhoea.png

வயிற்றுப்போக்கு

உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி, ஒருவருக்கு ஒருநாளைக்கு மூன்று முறை அல்லது அதற்கு மேல் அல்லது இயல்புக்கு மாறாக அடிக்கடி இளகி அல்லது நீர் போல மலம் வெளியேறுவது வயிற்றுப்போக்கு எனப்படும். இது பொதுவாக இரைப்பைத் நோய்த்தொற்றின் அறிகுறியாகும். இது பல்வேறு வைரஸ், பாரசைட், பாக்டீரியா நுண்ணுயிரிகளால் உண்டாகிறது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தன் அறிக்கையில் உலகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுள் வயிற்றுப் போக்கால் ஆண்டுதோறும் 13 இலட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர் என்றும் குழந்தைகள் மரணத்திற்கு இதுவே இரண்டாவது பெரும் காரணம் என்றும் கூறுகிறது. இதில் கீழ்க்கண்ட ஐந்து நாடுகளில் மட்டும் பாதி மரணங்கள் நிகழ்கின்றன: இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், எத்தியோப்பியா. இது தடுக்கக் கூடியதும் சிகிச்சை அளிக்கக்கூடியதும் ஆகும். கடுமையான வயிற்றுப் போக்கினால் நீர்ச்சத்து குறைந்து போகிறது. குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கும், சத்துணவின்றி போனவர்களுக்கும், நோய்த்தடுப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இது உயிருக்கே ஆபத்தானதாகும். அசுத்தமான உணவு அல்லது குடிநீர் மூலமாகவும் அல்லது சுகாதாரச் சீர்கேட்டினால் ஒருவரில் இருந்து இன்னொருவருக்குமாகத் தொற்று பரவுகிறது. அசுத்தமான உணவு அல்லது குடிநீர் மூலமாகப் பயணங்களின் போது பரவும் வயிற்றுப்போக்கு பொதுவாகப் பயணிகளின் வயிற்றுப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.

குறிப்புகள்www.nhs.uk
www.unicef.org
www.nlm.nih.gov
digestive.niddk.nih.gov
www.who.int
Diarrhea in India:   www.youtube.com

காரணத்தையும் பாதிக்கப்பட்ட நபரையும் பொறுத்து வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் அமையும்.

http://www.nhs.uk/Conditions/Diarrhoea/Pages/Symptoms.aspx

 • நீர்போன்ற மலம்
 • வயிற்றுக் கோளாறுகள்
 • இளகிய மலம்
 • மலம் கழிக்க அவசர உணர்வு
 • குமட்டலும் வாந்தியும்

மேற்கண்ட அறிகுறிகளுடன் கடுமையான வயிற்றுப் போக்கில் பின்வருவனவும் அடங்கும்:

 • தொடர் வயிற்றுப் போக்கால் உடலில் நீர்ச்சத்து குறையும்
 • மலத்தில் இரத்தம், சளி, செரிக்காத உணவு
 • உடலிடை குறைதல்
 • காய்ச்சல்

குறிப்புகள்: www.nhs.uk

உங்கள் குடலில் உள்ள பொருட்களில் இருக்கும் நீர்மம் உறிஞ்சப்படாத போதும், அதிகமான நீர்மம் குடலுக்குள் சுரக்கும் போதும் நீர் போல மலம் மாறுகிறது.

குறைந்த கால வயிற்றுப்போக்கு: இரைப்பைக் குடல் அழற்சியின் அறிகுறியே  வயிற்றுப் போக்கு. பின்வருவனவற்றால் அது ஏற்படலாம்:

 • நோரோவைரஸ் அல்லது ரோட்டோ வைரஸ் என்ற நுண்ணுயிரிகளால்
 • ஒட்டுண்னிகள்: ஜியார்டியாசிஸ்ஸை (giardiasis) உருவாக்கும் ஜியார்டியா போன்ற குடல் ஒட்டுண்ணிகள்
 • காம்பிலோபேக்டர் (campylobacter),  குளோஸ்ட்ரிடியம் டிபிசில்லி (Clostridium difficile (C. difficile), எஸ்செரிக்கியா கோலி (Escherichia coli (E. coli), சல்மோனெல்லா (salmonella),  ஷிகல்லா (shigella) போன்ற பாக்டீரியாக்கள்: அவை யாவும் உணவை நச்சாக மாற்றலாம்.

குறுகிய கால வயிற்றுப்போக்கிற்கான பிற காரணங்களில் அடங்குவன:

 • உணர்ச்சிவயப்படுதல் அல்லது பதற்றம்
 • அதிக அளவில் காப்பி அல்லது மது அருந்துதல்
 • உணவு ஒவ்வாமை
 • குடல்வால் அழற்சி
 • கதிர்வீச்சு மருத்துவத்தால் குடலின் உட்திசுக்கள் சிதைவு

சில மருந்துகளின் பக்க விளைவாகவும் வயிற்றுப்போக்கு இருக்கலாம். அவற்றுள் அடங்குவன:

 • நுண்ணுயிர் கொல்லிகள்
 • மக்னீசியம் கொண்டுள்ள அமிலமுறிவு மருந்துகள்
 • வேதியற் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள்
 • ஊக்கமருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள் (NSAIDs)
 • செலெக்டிவ் செரொடோனின் ரியூப்டேக் இன்ஹிபிட்டர்கள் (SSRI——Selective serotonin reuptake inhibitor)
 • ஸ்டேட்டின்கள் (Statins)—கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள்
 • மலமிளக்கிகள்

நீண்டகால வயிற்றுப்போக்கு

 • குடல் புற்றுநோயால் வயிற்றுப்போக்கும் உங்கள் மலத்தில் இரத்தக்கசிவும் உண்டாகலாம்.
 • நாட்பட்ட கணைய அழற்சி— இயக்க நீரையும் செரிமான பிழிவுகளையும் சுரக்கும் கணையத்தில் ஏற்படும் அழற்சி.
 • உடற்குழி நோய்– இச் செரிமான நிலை புரதப் பசையத்தை ஏற்காது.
 • கிரோனின் நோய்- செரிமான மண்டல உட்சுவர்களில் அழற்சி ஏற்படுத்தும் நிலை
 • எரிச்சல் தரும் குடல் நோய் (IBS)—குடலின் இயல்பான செயல்பாடுகளில் தடங்கல்-இந்நிலைக்கான காரணம் சரிவர அறியப்படவில்லை.
 • நுண்ணிய பெருங்குடல் அழற்சி– நீர் போல வயிற்றுப் போக்கு.
 • குடல் புண் பெருங்குடல் அழற்சி–– பெருங்குடலைப் பாதிக்கும் நிலை.
 • மிகுவியர்வைச் சுரப்பு (Cystic fibrosis)- பரம்பரையாக வரும் இந்நிலையில் நுரையீரலும் செரிமான மண்டலமும் பாதிக்கப்படுகிறது.
 • வயிற்றின் சில பகுதிகளை அறுவை சிக்கிச்சை மூலம் அகற்றும்போது தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் (உதாரணமாக வயிற்றுப்புற்று நோய்).
 • உடல்பருமனைக் குறைக்கும் அறுவை மருத்துவத்தால் (bariatric surgery) சில சமயம் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்-மிகவும் மிக அதிக பருமனாய் இருப்பவர்களுக்கு கடைசி முயற்சியாக இம்மருத்துவம் செய்யப்படுகிறது)

கீழ்வரும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டும்:

 • கைக்குழந்தைகளுக்கு
 • இளம் குழந்தைகளுக்கு மிதமான அல்லது கடுமையான வயிற்றுப்போக்கு
 • இரத்தம் உடன் வெளியேறினால்
 • தசைப்பிடிப்பற்ற வயிற்றுவலி, காய்ச்சல், எடைகுறைவு ஆகியவற்றுடன் சேர்ந்து
 • பயணம் செய்வோருக்கு
 • உணவைக் கையாளுவோருக்கு (பிறருக்குத் தொற்று பரவும் அபாயம் இருப்பதால்)
 • மருத்துவ மனை, குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், நோயாளி நலமனைகள் போன்ற நிறுவனங்கள்.

மல மாதிரிகள்: தொற்றின் காரணத்தை அறிய.

இரத்தப் பரிசோதனை: பொதுவாக அழற்சி அறிகுறிகளை அறிவதற்கு இரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இவை குடல் அழற்சி நோய்கள் இருப்பதை உணர்த்துகின்றன. வயிற்றுப்போக்கின் காரணம் இன்னும் தெளிவாகவில்லை என்றால் கீழ்வரும் கூடுதல் பரிசோதனைகளைச் செய்யும்படி நோயாளியை அறிவுறுத்த வேண்டியிருக்கும்:

 • சிக்மோய்டோஸ்கோப்பி: ஒரு முனையில் ஒரு புகைப்படக்கருவியும், விளக்கும் கொண்ட மெல்லிய நெகிழ்வான குழாய் ஆசனவாய் வழியாக உங்கள் குடலுக்குள் செலுத்தப்படுகிறது..

பெருங்குடல் அகநோக்கல்: மேற்கண்ட முறைப்படியே சற்று பெரிய குழாய் செலுத்தப்பட்டு உங்கள் குடல் முழுவதும் சோதிக்கப்படுகிறது

குறிப்புகள்www.nhs.uk

நீராகாரம் அருந்தவும்: நீர்ச்சத்துக் குறைவதைத் தடுக்க ஏராளமான நீராகாரங்களை அருந்துவது அவசியம்.

வாய்வழி நீர்ச்சத்தேற்றும் உப்பு (ORS) நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க இதைப் பயன்படுத்த வேண்டும். வீடுகளில் பயன்படுத்தப்படும் உப்பிட்ட கஞ்சி, தயிர் நீராகாரங்கள், மரக்கறி, உப்பிட்டு கோழி சூப் ஆகியவை கொடுக்கலாம்.

மருந்துகள்: நுண்ணுயிர்க் கொல்லிகள் சில வகை கடுமையான வயிற்றுப்போக்குக்குப் பயன்தருவதாகும். ஆனால் சில முக்கியமான சூழ்நிலைகளில் தவிர பொதுவாகப் பயன்படுத்துவதுகிடையாது. மருந்துக் கடைகளில் கிடைக்கும் மலமிறுக்கிகள்  கொண்ட பெப்டோ-பிஸ்மால் (Pepto-Bismol), இமோடியம் பிளஸ் (Imodium plus), லோப்பராமைட் ஹைட்ரோ குளோரைட் (Loperamide hydrochloride) போன்ற பல மருந்துகளைக் கொண்டு வயிற்றுப்போக்கை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த முடியும்.

உணவு: வயிற்றுப்போக்குள்ள குழந்தைக்குத் தொடர்ந்து உணவு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. தொடர்ந்து உணவு கொடுத்து வருவது குடலின் பணிகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும். மாறாக, குழந்தையின் உணவைக் கட்டுப்படுத்தினால் வயிற்றுப்போக்கு நீடிப்பதோடு குடலின் பணிகள் மெதுவாகவே இயல்பு நிலையை மீண்டும் அடையும்.

குறிப்புகள்:  www.nhs.uk
www.icmr.nic.in

வயிற்றுப்போக்கை உருவாக்கும் தொற்றுப் பரவலைத் தடுக்க எப்போதும் சுத்தத்தை வெகுவாகக் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக எப்போதும் நீங்கள்:

 • உணவு உண்ணுவதற்கும் சமைப்பதற்கும் முன்னும், கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னும் கைகளை நன்றாகக் கழுவவும்.
 • ஒவ்வொரு முறையும் வயிற்றுப்போக்குச் செல்லும் போது கழிவறையில் கைபடும் இடம், உட்காரும் இடம் ஆகியவற்றைக் கிருமி கொல்லிகளால் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
 • துண்டுகள், உணவு உண்ணும் கருவிகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வீட்டில் உள்ள பிற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.
 • கடைசி முறையாக வயிற்றுப் போக்கு போனதில் இருந்து 48 மணி நேரம் வரை பணிக்கோ பள்ளிக்கோ செல்வதைத் தவிர்க்கவும்.

குறிப்புகள்www.nhs.uk
digestive.niddk.nih.gov

 • PUBLISHED DATE : Apr 21, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.