புளோரின் படிவுநோய் ஒரு முடமாக்கும் நோய் ஆகும். உடலின் மென் மற்றும் வன் திசுக்களில் புளோரைடுகள் படிவதால் இது ஏற்படுகிறது. குடிநீர், உணவுப்பொருட்கள், தொழிற்சாலை மாசு ஆகியவற்றின் மூலம் நீண்ட காலமாகப் புளோரடுகளை உள்ளெடுப்பதால் விளையும் பொது சுகாதாரப் பிரச்சினை இது. மிகையாகப் புளோரைடை, குறிப்பாக குடிநீர் மூலம் எடுப்பதால் பற்களும் எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன.
பல், எலும்பு மற்றும் எலும்பற்றப் பகுதிகளில் புளோரைடு படிந்து ஒரு பெரும் சுகாதாரக் கோளாறாக மாறுகிறது. அதிக அளவில் புளோரைடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பை விட பற்களில் பாதிப்பு முதலில் ஏற்படும். பல்லில் புளோரைடு படிதல் குழந்தைகளைப் பாதித்து அவர்களின் பற்களை நிறமாற்றமும் சிதைவும் அடைய வைக்கின்றது. எலும்பில் புளோரைடு படிதல் எலும்பையும், கழுத்து, முதுகெலும்பு, தோள், இடுப்பு, முழங்கை மூட்டுகளைப் பாதித்துக் கடும் வலியையும், கடினத்தையும் மூட்டுகளில் விறைப்பையும் ஏற்படுத்தும். கடுமையான எலும்புப் புளோரைடு படிவு ஊனத்தை உண்டாக்கும். எலும்பற்றப் பகுதிகளில் ஏற்படும் படிவு ஆரம்பக் கட்ட வெளிப்பாடாகும். இவை எலும்பு அல்லது பற்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் முன்னரே உருவாகும். இவை இரைப்பைக்குடல் அறிகுறிகளாகத் தோன்றும். பிற நோய்களோடு பிணைந்து தவறாகக் கண்டறிவதற்கு வழிகோலும். இது அனைத்து வயதையும் சார்ந்த ஆண், பெண், குழ்ந்தைகளைப் பாதிக்கும்.
புளோரைடு படிவு நோய் உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் 25 நாடுகளில் இடம்சார் நோயாகவும் உள்ளது. புளோரைடு பட்டை என அறியப்படும் பகுதியில் இருந்து இந்நோய் அறிவிக்கப்படுள்ளது: ஒன்று சிரியாவில் இருந்து ஜோர்டான், எகிப்து, லிபியா, அல்ஜீரியா, சூடான் மற்றும் கென்யா வழியாகவும், இன்னொன்று துருக்கியில் இருந்து ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, வட தாய்லாந்து மற்றும் சீனா வழியாகவும் செல்லுகிறது. அமெரிக்கக் கண்டத்திலும் ஜப்பானிலும் இத்தகையப் பட்டைகள் உள்ளன.
இந்தியாவின் 20 மாநிலங்களின் 230 மாவட்டங்களில் அதிக புளோரைடு அளவு அறிவிக்கப்பட்டது (2014-ல் ஆந்திரா பிரிக்கப்பட்டப் பின்). அதிக அளவில் புளோரைடு கொண்ட இடங்களில் வாழும் ஆபத்தில் உள்ள மக்கள் தொகை 1-4-2014 கணக்கின் படி 11.7 மில்லியன் ஆகும். ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப்பிரதேசம் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஆகும். பஞ்சாப், அரியானா, மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா மிதமாகப் பாதிக்கப்பட்டவை, தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் அசாம் குறைவாகப் பாதிப்படைந்த மாநிலங்கள்.
இந்தியாவில் புளோரைடு படிவுநோய்க்கு முக்கியக் காரணம் நீரில் இருக்கும் புளோரைடே. குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இதனுடன் தொழிற்சாலை புளோரைடும் சேர்ந்து காணப்படுகிறது. இந்தியத் தரக்கட்டுப்பாட்டுத் தனிப்பிரிவின் (BIS) அளவுகோலின்படி இருக்கக்கூடிய புளோரைடு அளவு 1 பிபிஎம் (ppm) ஆகும் (ஒரு மில்லியனில் இருக்கும் பகுதிகள் அல்லது லிட்டருக்கு 1 மி.கி).
எலும்பு மற்றும் பல் பாதிப்பின் பிந்திய கட்டம் நிலையானதும் மாற்ற முடியாததுமான தன்மையுடையது. இது தனிநபர் மற்றும் சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக ஒரு நாட்டின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் எதிர் விளைவுகள் உண்டாகும்.
கிராம மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டம் 1987-1993 வரை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புளோரைடு படிவு தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்பு மூலம்) புளோரைடு படிவைக் குறுகிய அளவில் கட்டுப்படுத்த முனைந்தது.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2008-2009-ல் இடம்சார் பகுதிகளில் புளோரைடு படிவைத் தடுத்து, கண்டறிந்து, மேலாண்மை செய்யும் நோக்கத்தோடு தேசிய புளோரைடு படிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது.
குறிப்புகள்
www.who.int/water_sanitation_health
www.ircwash.org/sites/default/files
ஒரே நேரத்தில் அனைத்து அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வயது, ஊட்டச்சத்துநிலை, சூழல், சிறுநீரகச் செயல்பாடு, உள்ளெடுக்கப்பட்ட புளோரைடு அளவு, மரபியல் பின்னணி, ஒவ்வாமைப் போக்கு மற்றும் கால்சியமும் மக்னீசியமும் இருப்பதால் உண்டாகும் நீரின் கடினத்தன்மை போன்ற பிற காரணிகள் ஆகியவற்றைப் பொறுத்துக் கடுமையும் கால அளவும் இருக்கும்.
பல்வேறு அறிகுறிகள்:
எலும்பற்றப் பகுதியில் புளோரைடு படிவு/மென் திசுக்களில்/மண்டலங்களில் புளோரைடு படிவதன் விளைவு:
பெரும்பாலான வெளிப்பாடுகள் குறிப்பாக நிகழா. ஆனால் நோய்பாதிப்பு உள்ள இடங்களில் கவனமாகவும் சந்தேகத்துடனும் நோக்க வேண்டும். இத்தகைய ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் கிராமப் புறங்களில் பல நேர்வுகளைத் தொடக்க கட்டத்திலேயே கண்டறிய மிகவும் உதவியாக இருக்கின்றன. பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் குறுகிய காலத்தில் அதிக அளவில் பலன் விளைகின்றன.
குறிப்புகள்:
உணவு, நீர், காற்று (தொழிற்சாலை வாயுக் கழிவுகள்), அதிக அளவில் பற்பசையைப் பயன்படுத்துதல் போன்றவற்றினால் மிகையாக புளோரடை உள்ளெடுக்கும் போது புளோரைடு படிவு நோய் உண்டாகிறது. இருப்பினும் குடிநீரே முக்கிய காரணமாக இருக்கிறது.
மித-அளவு நீடித்த பாதிப்பு (1.5 மி.கி./1லி நீர் என்ற அளவுக்கு மேல்-நீரில் புளோரைடின் அளவு பற்றிய உ.சு.நி. வழிகாட்டுதல்) பரவலாகக் காணப்படுகிறது. அதிக அளவு புளோரைடால் உண்டாகும் கடும் பாதிப்பு அரிதான ஒன்றாகும். எதிர்பாராத விதமாகக் குடிநீர் மாசடைவதால் அல்லது தீ அல்லது வெடிவிபத்தால் இது நிகழலாம்.
நீரில் இருக்கும் புளோரைடு நிலவியல் அடிப்படையானது. உயராமான மலைகளின் அடிப்பகுதியிலும், நிலப்படிவுகள் கடலில் சேர்ந்துள்ள பகுதிகளிலும் அதிக அளவு புளோரைடு கொண்ட நீர் பெரும்பாலும் காணப்படும். நமது நாட்டில் கண்டறியப்பட்டுள்ள குடிநீரில் இருக்கும் புளோரைடு அளவு 0.2 – 48 மி.கி/லிட்டராக வேறுபடுகிறது. இந்தியத் தரக்கட்டுப்பாடுப் பிரிவின் அளவுகோலின் படி இருக்கத் தக்க வரையறை 1பிபிஎம் ஆகும்.
பிற ஆபத்துக் காரணிகள்:
புளோரைடை உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவுகள்: வாயில் உள்ள இரத்தக் குழாய்கள் அல்லது இரைப்பைக்குடல் வழியாக உடலுக்குள் புளோரைடு நுழைந்தவுடன் அது பல உடல் உறுப்புகளையும், திசுக்களையும் சென்றடைகிறது. புளோரைடு ஓர் எதிர்மின் தனிமம். இதனால் நேர்மின் திறன் கொண்ட கால்சியம் அயனிகளால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. எலும்பிலும் பற்களிலும் அதிக அளவில் கால்சியம் உள்ளது. இவற்றால் கவரப்படும் புளோரைடு கால்சியம் புளோரோபாடைட்டு படிகங்களாகப் படிகின்றன. அதே வேளையில் எலும்பு மற்றும் பல்லின் சில பகுதிகளில் கட்டுறாத கால்சிய இழப்பும் உண்டாகிறது.
குறிப்புகள்:
www.who.int/water_sanitation_health
www.toxicteeth.org/health/bone/fluorosis
www.mohfw.nic.in/WriteReadData
www.sihfwrajasthan.com/ppts/full/Fluorosis
www.icmr.nic.in/000519/updatevol1no2.pdf
www.ircwash.org/sites/default/files/
நோய்கண்டறிதலின் போது புளோரைடு கொண்ட அனைத்துப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். காணப்படும் அறிகுறிகள் புளோரைடால் ஏற்பட்டது என்றால் அவை ஒரு வாரத்துக்குள் கணிசமாகக் குறைந்து பல வாரங்களில் பெரும்பாலும் மறைந்து விடும். இரைப்பைக்குடல் அறிகுறிகள் 15 நாட்களுக்குள் மறையும்.
(l) இடம்சார்நோய்ப் பகுதிகளில் எலும்பு புளோரைடு நோயைக் கண்டறிய உடல் பரிசோதனை:
(அ) முட்டியை மடக்காமல் ஒரு நாணயத்தை எடுக்கச் செய்தல். எலும்பு புளோரைடுப் படிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு முட்டியை மடக்காமல் எடுக்க இயலாது (வேறு நோய்க்கும் இந்தச் சோதனை உண்டு).
(ஆ) நாடிச் சோதனை: நாடியால் மார்பின் மேற்பகுதியை தொடச் செய்தல். ஒருவருக்கு கழுத்தில் விறைப்போ அல்லது வலியோ இருந்தால் நாடியால் மார்பின் மேற்பகுதியைத் தொட இயலாது.
(இ) நீட்டல் சோதனை: கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, முழங்கையில் மடக்கி தலையின் பின் பகுதியைத் தொடச் செய்தல். வலியோ விறைப்போ இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய இயலாது.
(ll) கதிர்வீச்சு: X- கதிர் ஆய்வில் எலும்பின் சுற்றளவு, தடிமன் மற்றும் அடர்த்தியின் பெருக்கத்தையும், தசைநார்களில் சுண்ணாம்புப் படிவையும் காணலாம். கழுத்து, முதுகெலும்பு, முழங்கால், இடுப்பு மற்றும் தோள் மூட்டுகளில் புளோரைடின் அதிகபட்ச பாதிப்பைக் கண்டறியலாம். கை பாதங்களில் உள்ள சிறு எலும்புகளும் பாதிக்கப்படும்.
(lll) SA/GAG சோதனை (சியாலிக் அமிலம்/கிளைக்கோசாமினோகிளைகன் சோதனை): புளோரைடு நச்சை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிய இச்சோதனை நடத்தப் படுகிறது. SA/GAG சோதனை மூட்டழற்சி, எலும்புப்புரை மற்றும் தண்டுவட எலும்புச்சிதைவு ஆகியவற்றிற்குக் குறிப்பிடத்தக்க மதிப்பு மாற்றத்தைக் காட்டாது.
(lV) கீழ்வருவனவற்றில் புளோரைடு இருப்பை மதிப்பிடல்:
(V) இரத்தப்புரதக் கணக்கீடு: இரத்த சோகை கண்டறிய.
குறிப்புகள்:
கடுமையான எலும்பு புளோரைடு படிவுநோய்க்கு மருத்துவம் எதுவும் இல்லை. ஏற்பட்ட ஊனத்தைக் குறைக்க முயற்சிகள் செய்யலாம். இருப்பினும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் இந்நோயைத் தடுக்கலாம்.பாதுகாப்பான குடிநீர், ஊட்டச்சத்து, அதிக புளோரைடு கொண்ட உணவைத் தவிர்த்தல் ஆகியவையே தடுக்கும் நடவடிக்கைகள். பல் மற்றும் எலும்பு புளோரைடு படிவு மாற்ற முடியாதது; சிகிச்சை எதுவும் இல்லை; புளோரைடு உள்ளெடுப்பை பாதுகாப்பான எல்லைக்குள் பேணுவதே ஒரே வழியாகும்.
பல் புளோரைடு படிவுக்கு சிகிச்சை:
குறிப்புகள்:
அதிக அளவு புளோரைடை உட்கொள்ளுவதைத் தவிர்ப்பதன் மூலம் தனிநபரும் சமுதாயமும் புளோரைடு படிவு நோயைத் தடுக்க முடியும். கீழ் வரும் நடவடிக்கைகள் மூலம் இதை செய்ய முடியும்:
(அ) மாற்று நீராதாரத்தைப் பயன்படுத்துதல்: மேற்பரப்பு நீர், மழைநீர், புளோரைடு குறைந்த நிலத்தடி நீர் ஆகியவை இதில் அடங்கும்.
மேற்பரப்பு நீர்: மேற்பரப்பு நீரில் பெரும்பாலும் உயிரியல் மற்றும் வேதியியல் மாசுகள் இருப்பதால் குடிநீராக அதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். மணல் மூலம் வடிகட்டுதல், புறஊதா கிருமி நீக்கம், குளோரின் சேர்த்தல் (சில இடங்களில் போதுமானதாக இருக்கும் ; எல்லா இடங்களிலும் அல்ல) போன்ற எளிமையான மலிவான முறைகளால் மேற்பரப்பு நீர் தகுந்தவாறு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மழை நீர்:பொதுவாக இது சுத்தமான மலிவான எளிய நீர் ஆதாரமாகும். ஆனால் இதை சேமிக்க வீடுகளிலும் சமுதாய அளவிலும் பெரும்பெரும் தொட்டிகள் தேவைப்படும் என்பதே பிரச்சினை ஆகும்.
புளோரைடு குறைந்த நிலத்தடி நீர் : நீரடுக்கின் நிலவியல் அமைப்பு மற்றும் நீர் எடுக்கப்படும் ஆழம் ஆகியவற்றைப் பொறுத்து ஒரே பகுதியில் உள்ள கிணறுகளிலும் புளோரைடு அளவு மாறுபடும். துளைக் கிணறுகளை ஆழப்படுத்துவதும் புதிய கிணறுகளைத் தோண்டுவதும் பயன்தரும். நிலத்தடி நீரில் புளோரைடின் விநியோகம் நெடுக்காகவும் குறுக்காகவும் சமமற்ற வகையில் அமைந்துள்ளது.
(ஆ) நீரில் இருந்து புளோரைடை நீக்குதல்:
புளோரைடு படிவுநோயைத் தடுக்கப் பாதுகாப்பான புளோரைடு அளவுள்ள குடிநீரைப் பயன்படுத்துதலே சிறந்த வழி. இருப்பினும் இடம்சார் நோயுள்ள பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது அரிதாகும்.
எனவே, புளோரைடு நீக்கமே ஒரே வழி. இதைப் பல முறைகளில் செய்யலாம்:
(I) வேதியியல் வீழ்படிதல்: படிகார உறைவு (நல்கொண்டா உத்தி), மின்பகுபொருள் புளோரைடுநீக்கம்
· படிகார உறைவு/திரளல்: நல்கொண்டா உத்தி (ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நல்கொண்டாவில் முதல் சமுதாய புளோரைடு நீக்க ஆலை நிறுவப்பட்டது) திரளல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த உத்தி நாகபுரியில் அமைந்திருக்கும் தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது (NEERI). சுத்திகரிக்கப்படாத நீரில் அலுமினியம் சல்பேட்டு (ஆலும்: ஹைடிரேட் அலுமினியம் உப்பு), லைம் அல்லது சோடியம் கார்பனேட் (ஆலுமில் 1/20 பகுதி, காரச் சூழலில் இந்த முறை சிறப்பாக செயல்படுவதால்) மற்றும் சலவைத் தூள் (3 மி.கி./லி) சேர்த்து கிருமிநீக்கம் செய்யப்படுகிறது. சமுதாயம் மற்றும் வீட்டளவில் இந்த உத்தி பொருத்தமானது. வீட்டு அளவில், ஒரு வாளி நீரில் (20 லிட்டர்கள்) ஆலும், லைம் மற்றும் சலவைத்தூள் சேர்க்கப்படுகிறது (நீரின் காரத்தன்மையையும் புளோரைடு அளவையும் பொறுத்து ஆலும் மற்றும் லைமின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது). பின் இது 1 மணி நேரம் திரளலுக்கும் கசிறு வாளியின் அடியில் படிவதற்கும் வைக்கப்படுகிறது. கசிறு படிவிற்கு மேல் வாளியின் அடியில் இருந்து 5 செ.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய் வளியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் சேகரிக்கப்படுகிறது. கசிறு அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்ட சுத்த நீர் வேறு ஒரு வாளியில் சேமித்து வைக்கப்படும்.
· மின்பகுமுறையில் புளோரைடு நீக்கம்: சூரிய ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட மின்பகு ஆலைகள் சில இடம்சார் நோய்ப் பகுதிகளில் NEERI-யால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையில், (மிகை புளோரைடு கொண்ட) நீருக்குள் பொருத்தப்பட்டுள்ள அலுமினியம் மின்முனைகள் வழியாக ஒருதிசை மின்னோட்டத்தைச் செலுத்தும்போது, செயல் வகை அலுமினியம் ஹைடிராக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. நீரில் இருக்கும் புளோரைடு அயனிகள் இதனால் பரப்புக்கவர்ச்சி அடைகிறது. கசடும் சுத்த நீரும் பிரிகின்றன. மின்சாரம் குறைவாக உள்ள இடங்களில் சூரிய ஆற்றல் பயன்படுத்தப் படுகிறது. காய்ந்த கழிவு, நிலம் நிரப்பவும் செங்கல் செய்யவும் பயன்படும்.
(II) பரப்புக்கவர்ச்சி: இந்த அணுகுமுறையில், செயலூக்கம் பெற்ற அலுமினா (Al2O3), செயலூக்கம் பெற்ற கரி அல்லது அயனி பரிமாறும் பிசின்கள் போன்ற வலிமையான பரப்புறிஞ்சிகள் அடுக்கிய பத்திகளின் ஊடாக நீர் வடிகட்டப் படுகிறது. இந்த முறையும் சமுதாயம் மற்றும் வீடுகளுக்கு ஏற்றதாகும். பரப்புறிஞ்சிகளில் புளோரைடு அயனிகள் நிறைந்தவுடன் அரிப்பு ஒரு மென் அமிலம் அல்லது காரக் கரைசலால் பின்கழுவல் முறையால் சுத்தம் செய்யப்படும். பின்கழுவலுக்குப் பயன்படுத்தப்படும் பொருளில் புளோரைடு செறிந்திருப்பதால் அருகிலுள்ள நிலத்தடி நீரை பாதிக்காமல் அது கவனமாக அகற்றப்படவேண்டும்.
அனைத்து முறைகளிலும் அதி அடர் புளோரைடு கொண்ட கசடு (அகற்றப்பட வேண்டியது) உருவாகிறது; ஆகவே, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில், குடிக்கவும் சமைக்கவும் தேவைப்படும் நீரை மட்டுமே சுத்திகரிக்க வேண்டும்.
(III) அயனி பிரிப்பு:
(இ) சிறந்த ஊட்டச்சத்து: மேற்குறிப்பிட்ட பொறிநுட்ப தீர்வுகளோடு கூடுதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் (கால்சியம், உயிர்ச்சத்து சி, இரும்பு, ஆன்டாக்சிடன்டுகள்) பலன் தருபவை ஆகும். தாய்ப்பாலில் புளோரைடு குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்).
பின்வரும் முறைகளால் புளோரைடை அகற்ற முடியாது:
சுகாதாரக் கல்வி:
மனித வள மேம்பாடு: சுகாதாரம் மற்றும் பொது சுகாதார பொறியியல் பிரிவில் போதுமான மனித வளத்தை மேம்படுத்தல். இந்த நோயைக் கண்டறிய மருத்துவத்துறை சார்ந்தவர்கள்/மருத்துவர்களுக்கு தகவல்களை முழுமைபடுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இது போன்று பொது சுகாதார பொறியியல் துறை. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் மற்றும் பிற துறைகள் இடம்சார் நோய்ப் பகுதிகளில் ஆரம்பக் கட்டத்தில் நோயைக் கண்டறிவதிலும் தகுந்த நீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்த முக்கியத்துவம் தரப்படுகிறது.
புளோரைடு படிவுநோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (NPPCF)*
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நாட்டில் புளோரைடு படிவுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது, இத்திட்டம் 2008-09 ல் தொடங்கப்பட்டு கட்டம் கட்டமாக விரிவு படுத்தப்பட்டு வருகிறது. 11-வது திட்ட காலத்தில் 17 மாநிலங்களில் உள்ள 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2013-15ல் மேலும் 11 மாவட்டங்கள் (19 மாநிலங்களுக்கு மேல்) சேர்க்கப்பட்டன, 12-வது திட்ட காலத்தின் மீதியுள்ள காலகட்டத்தில் 84 புதிய மாவட்டங்கள் இணைக்கப்பட உள்ளன. ஒரு மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி NPPCF-யின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகும்.
NPPCF-யின் உத்திகள்:
குறிப்புகள்:
www.who.int/water_sanitation_health/