நுரையீரலில் ஏற்படும் கடுமையான நுண்ணுயிர் தொற்று நோயே கக்குவான் இருமல் ஆகும். அடக்கமுடியாத கடுமையான இருமலால் மூச்சுமுட்டு உண்டாகும். பலமுறை தொடர்ந்து இருமும்போது இழுத்து மூச்சு விட நேர்வதால் இழுப்பொலி உண்டாகிறது. இது பெரும்பாலும் பிறந்த மற்றும் இளம்பிள்ளைகளைத் தாக்குகிறது. குறிப்பாக ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது ஆபத்தானது.
குறிப்புகள் :
http://www.nhs.uk/conditions/Whooping-cough/Pages/Introduction.aspx
http://www.nlm.nih.gov/medlineplus/whoopingcough.html
http://www.cdc.gov/pertussis/
https://www.youtube.com/watch?v=l5SHtdczSBc
கக்குவான இருமலின் முக்கிய அறிகுறிகள்:
கக்குவான் இருமலின் பிற அறிகுறிகளில் அடங்குவன:
குறிப்புகள் :
http://www.cdc.gov/pertussis/about/signs-symptoms.html
போர்டெட்டெல்லா பெர்ட்டியூசிஸ் என்ற பாக்டீரியாவால் கக்குவான் இருமல் உண்டாகிறது. காற்றுப்பாதையின் உட்சுவரை நுண்ணுயிரிகள் பாதிக்கின்றன. நுரையீரலில் இருந்து பிரியும் இருபெரும் மூச்சுக் குழாய்களிலும் மூச்சுக்குழலிலும் தொற்றேறி நோயறிகுறிகள் வெளிப்பட ஆறில் இருந்து இருபது நாட்கள் ஆகின்றன. இது நோயரும்பும் காலம் எனப்படும்.
குறிப்புகள் :
http://www.cdc.gov/pertussis/about/causes-transmission.html
ஆய்வகச்சோதனை: மூக்குத்தொண்டை நோய்மாதிரி,
போர்டெட்-கெங்கவ் ஊடகத்தில் (Bordet-Gengou medium) வளராய்வுச் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
பாலிமெரேஸ் தொடர் வினை (PCR): பாலிமெரேஸ் தொடர் வினை என்பது மூலக்கூற்று உயிரியலின் ஒரு உயிர்வேதியல் நுட்பமாகும். இதில் ஒரு டி.என்.ஏ துண்டின் ஒன்று அல்லது ஒருசில நகல்கள் பலமடங்கு உருப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட டி.என்.ஏ வரிசையின் ஆயிரத்தில் இருந்து பல லட்சம் நகல்கள் உருவாக்கப்படுகின்றன.
ஊனீர் முறைகள்: நோய்வாய்ப்பட்ட முதல் மூன்று வாரங்களுக்குள் மட்டுமே நோயாளியிடம் இருந்து பாக்டீரியாவை எடுக்க முடியும். இதனால் இதற்குப் பின் நடத்தப்படும் வளராய்வுச் சோதனை, நேரடி ஒளிரும் எதிர்பொருள் (DFA) ஆய்வு ஆகியவை பயனற்றுப் போகின்றன. எனினும், மேலும் ஒரு மூன்று வாரத்திற்கு PCR ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்புகள் :
http://www.nhs.uk/Conditions/Whooping-cough/Pages/Diagnosis.aspx
குறிப்புகள் :
http://www.nhs.uk/Conditions/Whooping-cough/Pages/Treatment.aspx
உருவாகக் கூடிய கடுமையான சிக்கல்கள் வருமாறு:
குறிப்புகள் :
http://www.nhs.uk/Conditions/Whooping-cough/Pages/Complications.aspx
6, 10, 14 மாதங்களில் மூன்று தடவைகளாகவும், 16-24 மாதங்களிலும் 5-6 வயதிலும் செயலூக்கியாகவும் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தே கக்குவான் இருமலுக்கு உரிய தடுப்பு முறையாகும்.
குறிப்புகள் : http://mohfw.nic.in